சர்ச்சை ட்விட்... முன்ஜாமீன் மனு தள்ளுபடி: போலீஸிடம் சிக்கினார் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி!

சர்ச்சை ட்விட்... முன்ஜாமீன் மனு தள்ளுபடி: போலீஸிடம் சிக்கினார் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி!

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சைபர் க்ரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் சவுதாமணி. ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தமிழ் பயின்று தூர்தர்ஷன் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து தொழில் முனைவோராக புதிய அவதாரம் எடுத்தார். கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பிறகு பாஜக செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்று கொண்ட சவுதாமணி, கட்சி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பரபரப்பாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். ட்விட்டரில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக, சவுதாமணி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சவுதாமணி. அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது பாஜக நிர்வாகி சவுதாமணி கைது செய்யப்பட்டு இருக்கிறார். கலவரத்தைத் தூண்டி பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in