சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம்: அண்ணாமலையால் வெடித்த சர்ச்சை

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம்: அண்ணாமலையால் வெடித்த சர்ச்சை
சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம்: அண்ணாமலையால் வெடித்த சர்ச்சை

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு த்ரில் வெற்றியை தேடித்தந்தார்.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில், "ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர். அவர் ஒரு குஜராத்காரர். பாஜக காரியகர்த்தா தான் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்" என்று கூறியிருந்தார். தற்போது அண்ணாமலை கூறிய கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

"விளையாட்டில் ஜாதி, மதம், அரசியல் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திற்கும் இடமில்லை. கிரிக்கெட் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான தளம். இந்த தளத்தில் அரசியலைப் புகுத்தும்போது விளையாட்டு என்பது வருங்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முடியாது. எனவே இது போன்ற கருத்துக்களை அரசியல் தலைவர்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். இது அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாறிவிடும்" என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in