திமுக பேச்சாளரைக் கைது செய்யக்கோரி பாஜக போலீஸில் புகார்: அப்படி என்ன பேசினார் தெரியுமா?

திமுக பேச்சாளரைக் கைது செய்யக்கோரி பாஜக போலீஸில் புகார்: அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவின் மகளிரணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

திமுக தலைவராக இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை சென்னை ஆர்.கே.நகர் திமுகவினர் ஒருங்கிணைத்தனர். இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜும் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், மத்திய அமைச்சர் அமித் ஷாவை ‘அம்மன்’ திரைப்படத்தின் வில்லன் நடிகரோடு ஒப்பிட்டுப் பேசினார். பாஜகவைச் சேர்ந்த திரைத் துறைப் பிரபலங்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய சாதிக், குஷ்புவைப் பற்றி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகப் பேசினார். இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் பாஜகவின் மகளிரணி நிர்வாகி நதியா சீனிவாசன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ‘நடிகைகளை மிகவும் அவதூறாகப் பேசிய சைதை சாதிக்கை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்.’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சைதை சாதிக் ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். திமுக எம்.பி கனிமொழியும் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in