தாங்கும் பாஜக; வசூல் சாதனையில் ‘தி கேரளா ஸ்டோரி’

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு ஆதரவு
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு ஆதரவு

பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவால், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், வெளியான 3 தினங்களில் ரூ.35 கோடிக்கும் மேலாக வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது. இதன் பின்னணியில் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள், தி கேரளா ஸ்டோரிக்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

’கேரள மாநிலத்தின் இந்து மதத்தை சேர்ந்த 32,000 இளம்பெண்கள் லவ் ஜிஹாத் மூலம் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுவதை அம்பலமாக்கும் திரைப்படம்’ என்ற அறிமுகத்தோடு, வெளியாகும் முன்னரே பரபரப்பை கூட்டியது ’தி கேரளா ஸ்டோரி’.

திரைப்படத்தின் டிரெய்லருக்கே கண்டனங்கள் எழுந்ததில், கேரளத்தின் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையை 32 ஆயிரம் என்பதிலிருந்து 3 என்பதாக குறைத்து திருத்தத்துடன் வெளியிட்டது படக்குழு. அங்கே தொடங்கி படக்குழு முன்வைக்கும் தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து பொதுவெளியில் கேள்விகளும், கண்டனங்களும் அதிகரித்தன.

எனினும், பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பலவும் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு வலிய ஆதரவு தந்தன. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், வெளிப்படையாகவே திரைப்படத்தை விதந்தோதினார் பிரதமர் மோடி. ’காங்கிரஸ் கட்சி வாக்கரசியலுக்காக பயங்கரவாதத்தை எவ்வாறு வளர விட்டனர் என்பதற்கு உதாரணமாக, தி கேரளா ஸ்டோரி கதை இருப்பதாக’ மோடி சுட்டிக் காட்டினார்.

பெங்களூருவில் இன்று ’தி கேரளா ஸ்டோரி’ திரையரங்கில் ஜே.பி.நட்டா
பெங்களூருவில் இன்று ’தி கேரளா ஸ்டோரி’ திரையரங்கில் ஜே.பி.நட்டா

இதனையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் பலரும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிடுவதும், சான்றாக திரையரங்க புகைப்படங்கள் மற்றும் டிக்கெட்டுகளின் நகல்களை பதிவிடுவதுமாக தொடர்ந்து வருகின்றனர். பாஜக தலைவர்களும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்கில் ரசிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று பெங்களூரு ஐநாக்ஸ் திரையரங்கம் ஒன்றில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கண்டுகளித்தார். அது தொடர்பான புகைப்படங்களை பாஜகவினர் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் மாநில அரசு சார்பில் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட, உத்திர பிரதேசம் மா நிலத்தில் பாஜக அமைச்சர்கள் சார்பில் ‘லவ் ஜிஹாத்துக்கு எதிரான விழிப்புணர்வு’ என்ற பெயரில் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு போதிய வரவேற்பில்லை என்று, மல்டிபிளக்ஸ் தொடங்கி இதர திரையரங்குகள் வரை தி கேரளா ஸ்டோரி திரையிடலை நிறுத்துவதாக நேற்று முதல் தன்னிச்சையாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in