ஓபிஎஸ்சை பாஜகவில் சேர்த்து கொள்வீர்களா?- அண்ணாமலை ஓப்பன் பதில்

ஓபிஎஸ்சை பாஜகவில் சேர்த்து கொள்வீர்களா?- அண்ணாமலை ஓப்பன் பதில்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கலந்து கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பின்பு எதற்காக இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி நான் இந்த பட்டமளிப்பு விழாவிற்குச் செல்ல மாட்டேன் என்ற நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள்? தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும். அதில் பங்கேற்க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதாப் வரும்போதோ அல்லது மத்திய அரசு பிரதிநிதியாக ஒருவர் வரும்போதோ நான் செல்லமாட்டேன் என்று சொல்வாரா?

இதுபோன்ற நிலைப்பாட்டை பொன்முடி எடுக்கும் போது, இது எங்கே சென்று முடியும் என்ற கேள்விதான் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் எழுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்வியிலே அரசியல் செய்யாமல், இதையெல்லாம் விட்டுவிட்டு ஆளுநருடனும், மத்திய அரசுடனும் சுமுகமாக ஒரு போக்கை கடைப்பிடித்து மத்திய அரசிடம் எதை வாங்க முடியுமோ அதை வாங்கி வருவது அவரின் கடமை” என்றார்.

பாஜகவில் ஓபிஎஸ் இணைந்தால் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜகவின் கதவு எல்லோருக்கும் திறந்தே உள்ளது. எங்களுக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு கிடையாது என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in