பாஜக தலைவர் சுட்டுக்கொலை: சிசிடிவியால் சிக்கும் கொலையாளிகள்

பாஜக தலைவர் சுட்டுக்கொலை: சிசிடிவியால் சிக்கும் கொலையாளிகள்

ஹரியாணா மாநிலம் குருகிராமில் மர்மநபர்களால் பாஜக தலைவர் ஜவுளிக்கடையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியில் சிக்கியுள்ள கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் சுக்பீர். சோஹ்னா மார்க்கெட் கமிட்டி முன்னாள் தலைவரான இவர் பாஜக தலைவராக இருந்து வந்தார். குருகிராமில் சதர் பஜாரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு துணி வாங்குவதற்காக நேற்று மாலை அவர் சென்றார். அப்போது சுக்பீரை 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதனால் கடை மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சுட்டு விட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. படுகாயமடைந்த சுக்பீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சுக்பீர்.
சுக்பீர்.

"இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆதாரங்களைத் திரட்டியுள்ளோம். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என காவல்துறை அதிகாரி தீபக் சஹாரன் தெரிவித்தார். மேலும் " எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்றார். ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு நெருக்கமானவரான சுக்பீர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக, குர்கான் போலீஸார் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைக் கொண்டு தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in