பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் கைது

பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் கைது

சென்னையில் அனுமதியன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் மோசமான முறையில் பேசினார். இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் சைதை சாதிக்கின் பேச்சு வலைதளங்களில் வேகமாக வைரலானது. இந்த நிலையில் சைதை சாதிக் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவில் உள்ள பெண்களைத் திமுகவினர் கண்ணியக்குறைவாக பேசுவதாகக்கூறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவர்கள் திமுகவிற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in