இதை நீங்கள் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அதிரடியாக அறிவித்த அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலை

"எனது சொத்து மதிப்பு 117 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை நிரூபித்தால், அரசியல் விட்டு விலகுகிறேன்" என்று பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு வெளியாகியிருந்தது. முன்னதாக, தன்னுடைய வீட்டுக்கு வாடகை, தினசரி செலவு உட்பட அனைத்து செலவையும் நண்பர்கள்தான் பார்க்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவில் அண்ணாமலை மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டு வாடகை கூட நண்பர்கள்தான் கட்டுகிறார்கள் என்று கூறிய அண்ணாமலைக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை வேட்புமனு
அண்ணாமலை வேட்புமனு

இந்நிலையில், கடலூரில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்கள், சொத்துமதிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தேர்தல் வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் இல்லை. என்னுடை முழு சொத்துவிபரம், திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தகவல் உட்பட அனைத்தும் இருக்கிறது. முழுதாக படித்து விட்டு கேள்வி கேட்கவும். எனது சொத்து மதிப்பு 117 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று நிரூபித்தால் அரசியல் விட்டு வெளியேறுகிறேன். 11 சதவீதம்தான் உயர்ந்துள்ளது. வாட்ஸ்அப் பார்வேர்டு மெசேஜ் வைத்து கேள்விகளை கேட்க கூடாது.

அண்ணாமலை
அண்ணாமலை

சராசரியாக ஒரு மனிதனுக்கு ஓராண்டுக்கு 4 முதல் 6 சதவீதம் வரை எந்த சொத்து வைத்திருந்தாலும் அது உயரும். ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும்போது சொந்தப் பணத்தில் நிலம் வாங்கிப் போட்டேன். அந்த சொத்தின் மதிப்பு, சராசரியாக எத்தனை சதவீதம் உயருமோ, அதுதான் நடந்துள்ளது. நான் நேர்மையான அரசியல் செய்ய வந்துள்ளேன். நான் நிற்கும் கோவை தொகுதியில் கூட ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன். இதுபோன்று, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளும், மற்ற கட்சி வேட்பாளர்களும் சொல்வதற்கு தயாரா" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in