'நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்கு உள்ளாக்குவதா?’: மின்கட்டணத்தை உயர்த்திய செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை கண்டனம்

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தில் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ள தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அதனை ஈடு கட்டும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று நேற்று அறிவித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், " பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழக மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பு மின் கட்டணங்களையும் உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க, தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

நீங்கள் செல்வ செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்கு உள்ளாக்குவதா?" என்று அவர் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in