செந்தில் பாலாஜி வீழ்த்திய முதல் விக்கெட்: திமுகவில் இணைகிறார் பாஜக மகளிரணி நிர்வாகி!

செந்தில் பாலாஜி வீழ்த்திய முதல் விக்கெட்: திமுகவில் இணைகிறார் பாஜக மகளிரணி நிர்வாகி!

பாஜக மகளிரணியைச் சேர்ந்த மைதிலி வினோ என்பவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கோவை பாஜக அறிவித்துள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மைதிலி வினோ. இவர் திமுகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் அடிபட்டன. இது கோவை பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மைதிலி லினோவை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில், ‘கோவை மாநகர் மாவட்டத்தைச் சார்ந்த திருமதி மைதிலி வினோ என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த மைதிலி லினோ, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து திமுகவில் இணையப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவைக் கோவை பாஜக எடுத்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுப் பயணத்தின் போது மைதிலி லினோ திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in