`இடைத்தேர்தல் நிலைப்பாட்டை பாஜகவே அறிவிக்கும்'- சொல்கிறார் ஜெயக்குமார்

`இடைத்தேர்தல் நிலைப்பாட்டை பாஜகவே அறிவிக்கும்'- சொல்கிறார் ஜெயக்குமார்

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள்" என்று ஈபிஎஸ் அணியை சேர்ந்த ஜெயக்குமார் கூறினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதேநேரத்தில் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், நாங்களும் அதிமுக சார்பில் போட்டியிடும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக இன்று அதிரடியாக அறிவித்தார். கையோடு, தமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து அண்ணாமலையை சந்தித்து ஓபிஎஸ் திட்டமிட்டார்.

அதே நேரத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று மாலை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தங்கள் தரப்புக்கு ஆதரவு தர வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in