மோடி அலையை உருவாக்க ஊடகர்களை நியமிக்கும் பாஜக!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் மற்ற கட்சிகளைவிட வேகமாக முந்தியோடிக் கொண்டிருக்கிறது பாஜக. தேர்தல் பணிக்காக கிராமங்கள் வரைக்கும் கமிட்டிகளை அமைத்துவிட்டது பாஜக. அடுத்ததாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சர்கள் விசிட் தொடங்கி இருக்கிறது. இருந்தாலும் ஊடக தளத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்ற யோசனை அமித்ஷா தரப்பிலிருந்து முன்வைக்கப் பட்டதாம். இதையடுத்து, மோடியின் புகழ் பரப்பும் வகையில் பிராந்திய மொழிகளில் செய்திகளைத் தயாரிக்கவும் வீடியோக்களை வெளியிடவும் ஊடகத் துறையினரைத் தேடும் பணியைத் தொடங்கி இருக்கிறது பாஜக.

டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் ‘நேஷன் வித் நமோ’ என்ற அவுட் சோர்ஸிங் நிறுவனத்தின் மூலமாக இந்தப் பணிக்கான ஆட்களை நியமிக்கும் பணியைத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு 2024 மக்களவைத் தேர்தல் முடியும் வரை பணி இருக்குமாம். பிராந்திய மொழி அறிவோடு நியமிக்கப்படும் ஊடகவியலாளர்கள் அந்தந்த மாநில அரசியல் நுட்பங்களையும் அறிந்திருப்பார்கள் என்பதால் பாஜகவின் வளர்ச்சிக்கும், மோடிக்கான ஆதரவு அலையை உருவாக்கு வதிலும் இவர்கள் உதவுவார்கள் என்று ஐடியா கொடுத்ததும் அமித்ஷாதானாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in