‘பாஜக பயப்படுகிறது... பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீர் வரை பயணிக்கும்’ - ராகுல் காந்தி உறுதி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீர் வரை பயணிக்கும் என்றும், யாத்திரையை நிறுத்த பாஜக காரணங்களை உருவாக்குகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் நூஹ்வில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இந்த யாத்திரை காஷ்மீர் வரை பயணிக்கும். இப்போது பாஜக ஒரு புதிய யோசனையை கொண்டு வந்துள்ளது. கோவிட் வருகிறது, அதனால் யாத்திரையை நிறுத்துங்கள் என்று எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். பாருங்கள், இப்போது யாத்திரையை நிறுத்துவதற்கு பல்வேறு சாக்குபோக்குகள் கூறப்படுகின்றன. முகமூடி அணியுங்கள், யாத்திரையை நிறுத்துங்கள் என்கிறார்கள். இவை அனைத்தும் சாக்குபோக்குகள். அவர்கள் இந்த நாட்டின் வலிமை மற்றும் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள்" என்று கூறினார்.

முன்னதாக, நேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாரத் ஜோடோ யாத்திரையில் கோவிட் நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், தேசிய நலனுக்காக யாத்திரையை இடைநிறுத்துமாறும் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்திருந்தார். யாத்திரையின் போது முகக்கவசம் மற்றும் சானிடைசர்கள் உள்ளிட்ட கோவிட் நெறிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in