உபி, மணிப்பூர், உத்தராகண்ட், கோவாவில் பாஜக, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி?

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி
உபி, மணிப்பூர், உத்தராகண்ட், கோவாவில் பாஜக, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி?

உபி, மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியமைக்க உள்ளது.

403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக 236 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மீண்டும் அங்கு பாஜக ஆட்சியமைக்க உள்ளது. சமாஜ் வாதி கட்சி 100 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 43 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை பிடிக்க உள்ளது. 25 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், எஸ்பிபி 10 இடங்களிலும், பிற கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. 21 தொகுதிகளில் பெற்றி பெறும் கட்சியை அங்கு ஆட்சியமைக்க உள்ளது.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சி 13 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. அகாலிதளம் 8 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in