முதலில் உங்க கோவணத்தை கண்டுப்பிடிங்க.... துரை வைகோவை கிண்டல் செய்த ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

''பாஜக பற்றி துரை வைகோவின் பேச்சு நகைப்பிற்குரியதாக உள்ளது. முதலில் தொலைந்து போன உங்க கட்சிய (கோவணத்த) கண்டுபிடிங்க’’ என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சனாதன கலாசாரம் வேறு; இந்து மதம் வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. உதயநிதி ஸ்டாலின் பேசியதை, வடமாநிலங்களில் திரித்து, திராவிட இயக்கங்கள் இந்துக்களுக்கு எதிரி போல் சித்தரித்துள்ளனர் என துரை வைகோ அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘’ஏற்கெனவே மதிமுக விற்கு MLA கள் திமுக சின்னத்தில் போட்டியிட்ட அடிமைகள். இந்த லட்சணத்தில் என்னமோ பாஜக பற்றி துரை வைகோவின் நகைப்பிற்குரியதாக உள்ளது. முதலில் தொலைந்து போன உங்க கட்சிய (கோவணத்த) கண்டுபிடிங்க'' என கிண்டல் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in