பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா திடீர் கைது!

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

தடையை மீறி திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஹெச்.ராஜா விரைந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடில் வழிமறித்து பெரம்பலூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

திண்டிவனத்தில் ஏற்பாடாகி இருந்த மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பங்கேற்று பேசுவதாக இருந்தார். அங்கு வரும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்திருந்தனர். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்த கருப்புக்கொடி போராட்டத்தை விசிகவினர் அறிவித்திருந்தனர்.

மேலும் திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்று பேசுவதற்கு காவல்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனபோதும், தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திண்டிவனம் நோக்கி ஹெச்.ராஜா மற்றும் பாஜகவினர் கார்களில் விரைந்தனர். பெரம்பலூர் மாவட்ட எல்லையாக உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில், ஹெச்.ராஜாவை மறித்த பெரம்பலூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

ஹெச்.ராஜா கைது நடவடிக்கைக்கு எதிராக பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in