கணக்கு தப்பாகி அண்ணாமலை கோவையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்... காய்ச்சி எடுத்த கனிமொழி!

திமுகவின் கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்
திமுகவின் கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

பொய் செய்திகளை வெளியிடவே பாஜகவில் தனி குழுவை வைத்திருப்பதாகவும், பொதுமக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும், திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இன்று திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பி-யுமான கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். துடியலூர் பகுதியில் திரண்டிருந்த பொது மக்களிடையே அவர் பேசிய அவர், ”கோவை தொகுதியில் நாம் தெளிவாக வாக்களிக்க வேண்டும். தவறாகச் சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. சொந்தத் தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என்று அண்ணாமலை புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், கணக்கு தப்பாகி கோவையில் அண்ணாமலை மாட்டிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு மட்டுமே போட்டியிடுகிறார். தவறான விஷயங்களை பேட்டி மூலம் அள்ளி அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்” என்றார்.

துடியலூர் அருகே திமுக பிரச்சாரத்தில் கூடியுள்ள மக்கள்
துடியலூர் அருகே திமுக பிரச்சாரத்தில் கூடியுள்ள மக்கள்

மேலும், ”கோட்டாவில் பயின்றுவிட்டு இப்போது கோட்டாவில் வரவில்லை என அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். கட்டப்பட்ட மருத்துவமனைக்கு மீண்டும் அடிக்கல் நாட்டி பொய்ப் பிரச்சாரம் செய்தனர். இப்படி பொய்யான செய்திகளை பரப்பி மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்கி, மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால் போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர்” என்றார்.

திமுகவின் கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்
திமுகவின் கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

தொடர்ந்து பேசிய அவர், ”இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு விபத்து நடந்தால், இந்தியாவின் கடைசி தேர்தல் இது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு நடந்த அனைத்து கொடுமைகளிலும் அதிமுகவுக்கும் பங்கு உண்டு. தேர்தல் முடிந்ததும் இரண்டு ஸ்டிக்கர்களும் மீண்டும் ஒன்றாக ஒட்டிக்கொள்ளும்.

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி. பாஜகவினர் நாங்களும் இருக்கிறோம் என சொல்லிக்கொண்டு அலைகின்றனர். பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. ஜிஎஸ்டிக்கு பிறகு 25% சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் கவனத்தில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in