27 தொகுதிகள் எங்களுக்கு... கூட்டணி கட்சிகளுக்கு மிச்ச தொகுதிகள்: பாஜகவின் பக்கா பிளான்!

பாஜக
பாஜக

பாஜக கூட்டணிக்கு அதிமுக வராது என்று உறுதியான நிலையில் தமிழ்நாட்டில் 27 இடங்களில்  தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தங்கள் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்ட அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக கடும் முயற்சி செய்து பார்த்தது. அத்துடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மூலம் தூது அனுப்பிய நிலையிலும் அதை அதிமுக ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அதிமுகவுக்காக கூட்டணிக் கதவு திறந்திருக்கிறது என்று பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷா சொல்லியிருந்தார். 

பாஜகவுக்கான எங்கள் கதவு சாத்தப்பட்டு விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அதற்கும் மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த நிலையில் அடுத்ததாக தமிழ்நாட்டில் தனது தலைமையிலான கூட்டணியை  பாஜக உறுதி செய்திருப்பதாக தெரிகிறது.

தாமரை சின்னம்
தாமரை சின்னம்

அதன்படி தற்போது கூட்டணியில் உள்ள புதிய தமிழகம்,  இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவற்றுடன் பாமக மற்றும் தேமுதிகவை இணைத்துக் கொள்ள  முடிவு செய்து பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்கிறது. அந்த கட்சிகளுடன் தொகுதி உடன்பாடும் செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது.

அதன்படி பாமகவுக்கு விழுப்புரம், தர்மபுரி,  கடலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி ஆகிய ஏழு தொகுதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓரிரண்டு தொகுதிகளை பாமக விரும்பாவிட்டால் வேறு தொகுதி மாற்றி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

அதேபோல தேமுதிகவுக்கு சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய நான்கு தொகுதிகள் வழங்கும் முடிவில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல திருநெல்வேலியை சரத்குமார் கட்சிக்கும்,  தென்காசியை புதிய தமிழகம் கட்சிக்கும் வழங்கவும் பாஜக முடிவு செய்துள்ளது.

தேனி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளை ஓபிஎஸ் அணிக்கும், சிவகங்கை, திருச்சி ஆகிய தொகுதிகளை அமமுகவுக்கும், மயிலாடுதுறையை தமாகாவுக்கும், வேலூரை புதியநீதி கட்சிக்கும், பெரம்பலூரை இந்திய ஜனநாயக கட்சிக்கும் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இவற்றில் பாஜக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளைத் தவிர மீதமுள்ள கட்சிகளின் வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 27  இடங்களில் தாமரை சின்னம் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in