குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார முன்னிலை

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார முன்னிலை

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார முன்னிலை பெற்றுள்ளது.

குஜராத்தில் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு டிச.1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. டிச.1-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 63 சதவீத வாக்குகளும், டிச.5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஆட்சி அமைக்க அதாவது பெரும்பான்மையை நிரூபிக்க 92 இடங்களைப் பெற வேண்டும் என்பதால் அங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. குஜராத்தில் தொடர்ந்து பாஜக அபார முன்னிலை பெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in