தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சி: அமித் ஷா எடுக்கும் அரசியல் அஸ்திரம்!

தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சி: அமித் ஷா எடுக்கும் அரசியல் அஸ்திரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 19 மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “கடந்த தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றி, கட்சியின் வளர்ச்சியையும், செயல்திறனையும் காட்டுகிறது. குடும்ப ஆட்சி, சாதிவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும். அடுத்த 40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தமாக இருக்கும். இந்தியா உலகத்தை ஆளும் நாடாக மாறும்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் வன்முறையைப் பரப்ப முயன்றனர். பிரதமர் மோடி இதுபோன்ற நாடகத்தை ஒருபோதும் செய்யவில்லை. காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது . காந்தி குடும்ப உறுப்பினர்கள் பலர் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகச் சொல்லி வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in