பாஜகவுக்கு கிடைத்த ரூ.614 கோடி: காங்கிரஸ், ஆம் ஆத்மி பெற்ற நன்கொடை எவ்வளவு தெரியுமா?


பாஜகவுக்கு கிடைத்த ரூ.614 கோடி: காங்கிரஸ், ஆம் ஆத்மி பெற்ற நன்கொடை எவ்வளவு தெரியுமா?

2021-22 ம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜக ரூ. 614.53 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது எதிர்க்கட்சியான காங்கிரஸால் திரட்டப்பட்ட நிதியை விட ஆறு மடங்கு அதிகம். தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, காங்கிரஸ் கடந்த நிதியாண்டில் 95.46 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 43 லட்ச ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. கேரளாவில் ஆட்சியில் இருக்கும் சிபிஎம் கட்சிக்கு 10.05 கோடி ரூபாய் நிதி கிடைத்தது. நான்கு தேசியக் கட்சிகளும் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தங்களது சமீபத்திய நன்கொடை அறிக்கையை தாக்கல் செய்திருந்தன. அவை நேற்று வெளியிடப்பட்டது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, 2021-22 நிதியாண்டில் ரூ. 44.54 கோடியை நன்கொடையாகப் பெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

தனிநபர் நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ரூ. 20,000 க்கும் அதிகமான நன்கொடைகளின் வருடாந்திர அறிக்கையை கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in