சித்தாந்த அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: சொல்கிறார் பாஜக பொதுச்செயலாளர்!

சித்தாந்த அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: சொல்கிறார் பாஜக பொதுச்செயலாளர்!

அதிமுகவுடன் சித்தாந்த அடிப்படையில் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கூறியுள்ளார்.

பாஜகவின் 8-ம் ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி மாவட்டத்துக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் இன்று வந்தார். அவர் உதகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்," பிரதமர் மோடி சென்னையில் கடந்த மாதம் 26-ம் தேதி ரூ.31,500 கோடி மதிப்பில் 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்கள் மருத்தங்கள் மூலம் ரூ.100 கோடிக்கு மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு 11 தவணையாக ரூ.22 ஆயிரம் கோடி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் சிபிஎஸ்சி பள்ளிகள் எண்ணிக்கை 200-லிருந்து 1700 ஆக உயர்ந்துள்ளது. இது மாநில அரசின் பாடத்திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது. அதிமுக உடனான கூட்டணி சித்தாந்த அடிப்படையில் இல்லை. பாஜக குறித்து அதிமுகவின் பொன்னையன் அரைகுறையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களுக்கு எதிரான திமுகவுடன் நாங்கள் நேரடியாக மோதுகிறோம். அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிட உள்ளோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in