திரிபுரா, நாகலாந்து தேர்தலில் பாஜக கொடி பறக்குது: மேகாலயாவில் பின்னடைவு

வடகிழக்கு மாநில தேர்தலில் பாஜக வெற்றி
வடகிழக்கு மாநில தேர்தலில் பாஜக வெற்றிதிரிபுரா, நாகலாந்து தேர்தலில் பாஜக கொடி பறக்குது: மேகாலயாவில் பின்னடைவு

திரிபுரா, நாகலாந்தில் நடைபெற்ற சட்டப்பேவைத் தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேகாலயாவில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஜன.18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்எல்ஏ காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணும் பணி காலை 9 மணியளவில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரிபுரா, நாகாலாந்தில் பாஜக பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது. நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 60 இடங்களை உள்ளடக்கிய திரிபுராவில் பாஜக 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி 10 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருக்கிறது. தனித்து போட்டியிடும் பாஜக பின்னடவைச் சந்தித்துள்ளது. எதிர்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவைக்கு வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்வர் கன்ராட் சங்கா தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அவர் போட்டியிட்ட தெற்கு துரா தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in