ஈபிஎஸ்ஸை சாடிய பாஜக நிர்வாகி; மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்: ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு

மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்
மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன் ஈபிஎஸ்ஸை சாடிய பாஜக நிர்வாகி; மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்: ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேச முயன்ற பாஜக மாவட்டச் செயலாளரிடம் இருந்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மைக்கை பறித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாக கூறி கட்சியினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், நிர்வாகிகள் நடிகை குஷ்பு, பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆனந்த் பேசுகையில், தமிழகத்தில் எதிர்க்கட்சி பாஜக தான் என்று கூறியதோடு எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த கரு.நாகராஜன் விஜய் ஆனந்திடம் இருந்து மைக்கை பிடுங்கி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனை விஜய் ஆனந்த் சிரிப்புடன் சமாளித்து கொண்டார். இந்த சம்பவம் ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக அதிமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மேலும் இந்த பிரச்சினை ஏற்படாமல் இருக்க மூத்த நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகளை கண்டித்து வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க முயன்ற பாஜக மாவட்ட தலைவரிடம் இருந்து மைக்கை பிடுங்கினார் கரு.நாகராஜன். அவரின் இந்த செயல் அங்கிருந்த பாஜக நிர்வாகிகளை யோசிக்க வைத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in