ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் கட்சியில் இருந்து நீக்கம்: அதிகாலையில் சேர்ப்பு

எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு போராட்டம்
எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு போராட்டம்ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் கட்சியில் இருந்து நீக்கம்: அதிகாலையில் சேர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக இளைஞரணி நிர்வாகி நேற்று இரவு கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஆனால், இன்று அதிகாலையில் அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து பாஜகவைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக - பாஜக இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைமைக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். அத்துடன் கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்றிரவு அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அவர் அவர் பதவியில் தொடருவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இரவில் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அதிகாலையில் அது ரத்து செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மேலிடத்தின் ஆதரவுடன் தான். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தினேஷ் ரோடி எரித்துள்ளாரா என்ற என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in