‘தோல்வி பயத்தில்தான் பின்வாங்கினார்கள்’ - பாஜகவை சீண்டும் உத்தவ் தாக்கரே அணி

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர மாநிலத்தின் அந்தேரி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், தோல்வி உறுதி என்பதை உணர்ந்து பாஜக போட்டியிலிருந்து விலகியதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு கூறியுள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ நாளிதழின் முதல் பக்கத்தில் இடைத்தேர்தல் குறித்த கட்டுரையில் "அந்தேரியில் இருந்து பின்வாங்கிய கம்லாபாய்" என்ற தலைப்பில் பாஜகவை விமர்சித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால் அந்தேரி கிழக்கு இடைத்தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கேவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாஜக முர்ஜி படேலை முன்னிறுத்தியிருந்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர், “மகாராஷ்டிர அரசியல் கலாச்சாரப்படி உயிரிழந்தவரின் உறவினரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கவேண்டும்” பாஜகவிடம் வலியுறுத்தினார்கள். இதன் காரணமாக இடைத்தேர்தலில் பாஜக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

சாம்னா நாளிதழில், “பாஜக வேட்பாளரை வாபஸ் பெற்றது சாதாரணமாக தெரியவில்லை. அந்தேரி தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் ஷிண்டே-ஃபட்னாவிஸ் அரசு அதற்கு விலை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவர்களின் (பாஜக-ஷிண்டே குழு) கார் ஆபத்தான திருப்பத்தில் இருந்தது. அது விபத்தை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த விபத்தைத் தவிர்க்க, அவர்கள் பிரேக் போட்டு யு-டர்ன் எடுத்தனர். தீக்காயங்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக (தாக்கரே கோஷ்டியின் எரியும் ஜோதி சின்னத்தைக் குறிப்பிடுவது) மற்றும் உடனடி தோல்வியை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பாஜக வேட்பாளரை திரும்பப் பெறும் ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுத்தது " என்று கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in