
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் 15 பேர் கொண்ட கும்பல் புகுந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த பள்ளிக்கரணை வாலாஜாநகரை சேர்ந்தவர் மதனகோபால் இவர் சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவராக இருக்கிறார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரது வீட்டிற்கு நேற்று இரவு 17 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. வீட்டில் புகுந்த அந்த கும்பல் மதனகோபாலையை தேடி இருக்கிறது. ஆனால் மதனகோபால் வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டும் இருந்து இருக்கிறார். அவரை அந்த கும்பல் மிரட்டிவிட்டு சென்றிருக்கிறது.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுவீசி விட்டு சென்று இருக்கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இளைஞர் ஒருவர் கொலை வழக்கில் மதனகோபாலை பழிவாங்க அந்த கும்பல் கொலை செய்ய வந்தது தெரியவந்தது. சரித்திர குற்றவாளியான பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் கும்பல் புகுந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.