அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு கண்ணாடி வழங்கிய பாஜக மாவட்ட தலைவர்: சர்ச்சையில் சிக்கிய மேலாளர்!

மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன்.
மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன்.

மதுரையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாஜக மாவட்ட தலைவரை அழைத்து கண்ணாடி வழங்கிய விவகாரத்தில் பணிமனை மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது.

மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மே 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பணிமனை அலுவலகத்தில் 24-ம் தேதி கண்ணாடி வழங்கப்படும் கிளை மேலாளர் அபிமன்யு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதன் அடிப்படையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மதுரை பணிமனை அலுவலகத்தில் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் கலந்து கொண்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு கண்ணாடி வழங்கியுள்ளார். இந்த பிரச்சினை தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன் கூறுகையில், “தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதி அல்லாத பாஜக மாவட்ட தலைவர் சரவணன் ஊழியர்களுக்கு கண் கண்ணாடி வழங்கியுள்ளார். விரைவு போக்குவரத்து கழக மதுரை பணிமனை கிளை மேலாளர் அபிமன்யு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டித்திற்குரியது. எனவே கிளை மேலாளர் அபிமன்யு மீது அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in