ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆம் ஆத்மியை தோற்கடித்தது பாஜக: சண்டிகர் மேயரானார் அனுப் குப்தா!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆம் ஆத்மியை தோற்கடித்தது பாஜக: சண்டிகர் மேயரானார் அனுப் குப்தா!

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஜஸ்பீர் சிங்கை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து பாஜகவின் அனுப் குப்தா சண்டிகரின் புதிய மேயராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அனுப் குப்தா 15 வாக்குகளையும், ஆம் ஆத்மி வேட்பாளர் 14 வாக்குகளையும் பெற்றார்.

சண்டிகர் மாநகராட்சியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுக்கும் அவையில் தலா 14 கவுன்சிலர்கள் உள்ளனர். அதே சமயம் சண்டிகரின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரோன் கெர், முனிசிபல் கார்ப்பரேஷன் ஹவுஸில் முன்னாள் அலுவல் உறுப்பினர் என்ற முறையில் வாக்குரிமை பெற்றுள்ளார். அதனால் கிரொன் கெரும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றார். இதன் காரணமாக இன்றைய தேர்தலில் ஆம் ஆத்மியை விடவும் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று பாஜக மேயர் வேட்பாளர் அனுப் குப்தா வெற்றி பெற்றார்.

சண்டிகர் மாநகராட்சியில் 6 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸும், ஒரு உறுப்பினரைக் கொண்ட ஷிரோமணி அகாலி தளமும் வாக்களிக்காததைத் தொடர்ந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. நாளை மறுநாள், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in