
நாளை நடைபெறவுள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை தமிழக பாஜக புறக்கணிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. நாளை அந்த கூட்டத்தில் பாஜக பங்கேற்கும் என அக்கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைக் கூறியிருந்தது. இந்நிலையில், நிலுவையில் இருந்த மசோதாக்களை தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக சனிக்கிழமை சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை நடத்தி ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அவரின் ஒப்புதலுக்காக அனுப்ப தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தை பாஜக எம் எல் ஏக்கள் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அதனை மறுத்துள்ளார்.
மேலும்’ நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தமிழக பாஜக நிச்சயம் பங்கேற்று எங்களது கருத்துக்களை நாங்கள் அவையில் எடுத்து வைப்போம்’’ என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாளை நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத்தில் பாஜக பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!
அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!