காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கிறது பாஜக - கமல்நாத் விமர்சனம்!

கமல்நாத்
கமல்நாத்

பாஜகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது; அவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்கும் திறன் இல்லை. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கின்றனர் என மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் வரும் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவிவரும் சூழலில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

ராகுல் காந்தி கமல்நாத்
ராகுல் காந்தி கமல்நாத்

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், சாகர் மாவட்டம் ரஹ்லியில் நடந்த பிரசாரத்தின் போது பேசியதாவது, “முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நல்ல நடிகர். மும்பைக்கு சென்று நடிப்பு தொழிலை மேற்கொண்டால் மத்திய பிரதேசத்தையே பெருமைப்படுத்துவார். நவம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு மக்கள் விடைகொடுப்பார்கள்.

சிவராஜ் சிங் சௌகான், கமல்நாத்
சிவராஜ் சிங் சௌகான், கமல்நாத்

ஆனால் ஒரு நல்ல நடிகர் என்பதால் சவுகான் வேலையில்லாமல் இருக்கமாட்டார். பணத்தின் அடிப்படையில் இயங்கும் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த தேர்தல் மத்திய பிரதேசத்தின் எதிர்காலத்துக்கானது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்த சவுகான், குறைந்த பட்சம் காலியாக உள்ள அரசு பதவிகளையாவது நிரப்ப வேண்டும். பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை பொய்யானது; அவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்கும் திறன் இல்லை. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கின்றனர்” இவ்வாறு அவர் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in