ஆளுநர் பதவியை துறந்தது நல்ல முடிவு என நினைக்கிறேன்... தமிழிசையின் தடாலடி ஸ்டேட்மென்ட்!

பிரச்சாரத்தில் தமிழிசை
பிரச்சாரத்தில் தமிழிசை

“ஆளுநராக இருந்து அக்காவாக வந்துருக்கேன்... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... விரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என தென் சென்னையில் களமிறங்கி இருக்கும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை செய்தியாளர் சந்திப்பு
தமிழிசை செய்தியாளர் சந்திப்பு

பாஜக சார்பில் தென்சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் கோயம்பேடு சிவன் கோயிலில் இருந்து இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார் பிரச்சாரத்துக்கு நடுவே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” சாலையோரம் இருந்த ஒரு உணவகத்தில் வடை வாங்கி சாப்பிட்டேன். அந்தக் கடையில் இருந்தது ஒரு பெண். அவங்க டிஜிட்டல் பேமென்ட் வெச்சிருந்தாங்க. இதை விட மோடி அவர்களின் சாதனையை எப்படி சொல்வது..?

தமிழச்சி, தமிழிசை
தமிழச்சி, தமிழிசை

மக்கள் நினைத்தால் ஓடோடி வரக்கூடிய மக்களவை வேட்பாளரை தென்சென்னை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நானும் அவர்களுக்கு அப்படிப்பட்ட உறுப்பினராக இருப்பேன். நான்கரை ஆண்டு காலம் கழித்து மக்களை சந்திக்கின்றேன். இரண்டாவது மூன்றாவது மாடியில் இருந்தெல்லாம் மக்கள் கைகளை காட்டும் பொழுது நான் ஆளுநர் பதவியை துறந்தது நல்ல முடிவு என நினைத்தேன்.

ஆளுநராக இருக்கும் பொழுது ஒரு இடத்திற்கு சென்றால் ஜீரோ டிராபிக், நூறு காவலர்கள் பாதுகாப்பிற்கு வருவார்கள். அப்போதெல்லாம் மக்களை பார்க்காமல் சென்று விடுவேன். இன்று அவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு மக்களோடு மக்களாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

தொடர்ந்து நேற்று ஆளுநர் அக்காவாக வந்திருக்கிறேன் என தமிழச்சி தங்கபாண்டி விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை, “ஆளுநராக இருந்து அக்காவா வந்துருக்கேன்... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... விரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in