வளர்ச்சியைப் பற்றி பேச முதல்வருக்கு உரிமை இல்லை... தமிழிசை செளந்தரராஜன் ஆவேசம்!

தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம்
தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம்

அடிப்படைக் கட்டமைப்பை பற்றி பேசுவதற்கோ, வளர்ச்சியை பற்றி பேசுவதற்கோ தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் சுப்பிரமணியனுக்கும் எந்த உரிமையும் கிடையாது என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தென்சென்னை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார். தென்சென்னை தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வரும் அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம்
தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம்

அந்தப்பதிவில், ’அடிப்படைக் கட்டமைப்பை பற்றி பேசுவதற்கோ, வளர்ச்சியை பற்றி பேசுவதற்கோ தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கோ மற்றும் அமைச்சர் சுப்பிரமணியனுக்கோ எந்த உரிமையும் கிடையாது. தென் சென்னை முழுவதுமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கழிவுநீர் அடைப்புகள் இல்லாத கால்வாய், குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்ட சாலைகள், ஆக்கிரமிப்பு இல்லாத சாலைகளை காண்பிக்கட்டும். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் தென் சென்னையில் ஆட்சி வகிப்பவர்கள் தென் சென்னையை பாழாக்கி வைத்திருக்கிறார்கள்’

தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம்
தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம்

’தாமரைக்கு வாக்களித்தால் மட்டுமே தென் சென்னையை வளர்ச்சி அடைந்த நாடாளுமன்ற தொகுதியாக மாற்ற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதை விட்டுவிட்டு தென்சென்னை தொகுதி வளர்ச்சி அடைவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். அதிமுக-திமுக என்ற இரு கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து ஏமாந்து போனதைவிட வளர்ச்சி அடைந்த தென்சென்னையாக ஆக்குவதற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in