நல்லா வருவப்பா... வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஜய பிரபாகரனை வாழ்த்திய ராதிகா சரத்குமார்!

விஜய பிரபாகரனை வாழ்த்தும் சரத்குமார்
விஜய பிரபாகரனை வாழ்த்தும் சரத்குமார்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு, பாஜகவின் சரத்குமாரும், வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இன்று பங்குனி உத்திரம் என்பதால் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வத்துடன் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் ராதிகா சரத்குமாரும், விஜயபிரபாகரனும்
வேட்பாளர்கள் ராதிகா சரத்குமாரும், விஜயபிரபாகரனும்

இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார், பாஜக நிர்வாகிகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.

கொட்டு முரசு மறந்துராதீங்க... சைகையால் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கொட்டு முரசு மறந்துராதீங்க... சைகையால் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அப்போது சரத்குமார், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் விஜய பிரபாகரனின் கரங்களைப் பிடித்து வாழ்த்து தெரிவித்த அவர், அவரை கட்டி அணைத்தும் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் வேட்பாளர் ராதிகா சரத்குமாரும், விஜய பிரபாகரனும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனை பார்த்த பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள ஆச்சர்யமடைந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in