அதிர்ச்சி வீடியோ... நடுரோட்டில் டிஎஸ்பியை தாக்கிய பாஜகவினர்!

அதிர்ச்சி வீடியோ... நடுரோட்டில் டிஎஸ்பியை தாக்கிய பாஜகவினர்!

திண்டுக்கல் பழனி முருகன் கோவிலுக்கு வருகைத் தந்த தமிழக ஆளுநரை வரவேற்பு அளிக்கக் கூடியிருந்த பாஜகவினர் - போலீஸார் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. நடுரோட்டில் டிஎஸ்பியை பாஜகவினர் தாக்கியது அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. விழாவில், தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆளுநர் வருகைத் தந்தார்.

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஆளுநரை வரவேற்கும் விதமாகவும் பாஜகவினர் திரண்டு இருந்தனர். அனுமதியின்றி பாஜகவினர் திரண்டதால் அவர்களை கலைந்து போகுமாறு டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீஸார் கூறினர்.

அப்போது பாஜக மாவட்டத் தலைவர் கனகராஜுக்கும் டிஎஸ்பி சரவணன் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது டிஎஸ்பி சரவணன் மாவட்டத் தலைவரைத் தள்ளி விடவே டிஎஸ்பியை சூழ்ந்துக் கொண்ட பாஜகவினர் அவரை அடிக்க பாய்ந்தனர். இதுத் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in