சிறுபான்மையினரை கவர வியூகம்... பாஜகவின் புதிய துணைத் தலைவரான தாரிக் மன்சூரின் பின்னணி என்ன?

தாரிக் மன்சூர்
தாரிக் மன்சூர்சிறுபான்மையினரை கவர வியூகம்... பாஜகவின் புதிய துணைத் தலைவரான தாரிக் மன்சூரின் பின்னணி என்ன?

முஸ்லிம் பாஸ்மாண்டா சமூகத்தினரிடையே பாஜகவின் செல்வாக்கை வலுப்படுத்தும் முயற்சியில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூரை தங்கள் கட்சியின் துணைத் தலைவராக பாஜக நியமித்துள்ளது.

2020-ல் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தபோது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் தாரிக் மன்சூர். அப்போது அவர் மாணவர்களின் பக்கம் நிற்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டார்.

அதன்பின்னர் பின்னர் அமைதியான இந்து-முஸ்லிம் உறவு பற்றிய முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் போதனைகளை ஊக்குவிக்கும் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கமாக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இப்போது பாஜகவின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

2017 முதல் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக மன்சூர் உள்ளார். கடந்த சில ஆண்டுகளில் பாஜகவால் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது முஸ்லிம் இவர் ஆவார். தாரிக் மன்சூர் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர். அங்கு முஸ்லிம்கள் மாநிலத்தின் வாக்காளர்களில் சுமார் 19 சதவீதம் உள்ளனர்.

மேலும் குறைந்தபட்சம் 30 மக்களவைத் தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அவற்றில் 15 முதல் 20 தொகுதிகளில் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் முஸ்லிம் வாக்குகள் பெரும் பங்கு வகிக்கிறது. சிறுபான்மை மோர்ச்சா கூட்டங்கள் மூலம் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினரை பாஜக சென்றடைய நினைக்கிறது. பெரும்பாலும் தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாஸ்மாண்டா முஸ்லிம்கள் மீது பாஜக கவனம் செலுத்துகிறது.

தாரிக் மன்சூர், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், 1970-ம் ஆண்டுகளில் இருந்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர். அவர் ஜேஎன் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சையில் எம்பிபிஎஸ் பட்டம் முடித்தார். பின்னர் அதே கல்லூரியில் 1982-ல் முதுகலை அறுவை சிகிச்சை பட்டம் பெற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in