மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியது தான் திமுக சாதனை... அண்ணாமலை ஆவேசம்!

ஸ்ரீபெரும்புதூரில் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்
ஸ்ரீபெரும்புதூரில் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்

திமுக கவுன்சிலர் தேர்தல் போலவும், அதிமுக மாநில தேர்தல் போலவும் பிரசாரம் செய்து வருவதாகவும், ஆனால் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரசாரம் செய்யவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இங்கு அந்த கட்சியின் சார்பில் வேணுகோபால் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மணிக்கூண்டு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வெளி வாகனத்தில் பொதுமக்கள் மத்தியில், மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு அவர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்
ஸ்ரீபெரும்புதூரில் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்

அப்போது பேசிய அண்ணாமலை, ”திமுக செய்த சாதனையே மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியது தான். நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர். பொய் பேசுபவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்க வேண்டுமென்றால், அது முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தான் கொடுக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களிடம் பொய் கூறுகிறார்கள்” என்றார்.

ஸ்ரீபெரும்புதூரில் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்
ஸ்ரீபெரும்புதூரில் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்

மேலும், ”திமுக இந்த தேர்தலை கவுன்சிலர் தேர்தல் போல் பிரசாரம் செய்கிறது. அதிமுக மாநில தேர்தல் போல் பிரசாரம் செய்கிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரசாரம் செய்யவில்லை. திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் 350 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுதான் திமுக. வெற்றி பெற்றால் அவர்களின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர, மக்களின் வாழ்வாதாரம் உயராது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in