'உங்கள் அரசியல் மலக்குழியை விட மோசமாக வீசுகிறது': சு.வெங்கடேசன் எம்.பியைச் சாடும் பாஜக!

பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா
பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா'உங்கள் அரசியல் மலக்குழியை விட மோசமாக வீசுகிறது': சு.வெங்கடேசன் எம்.பியைச் சாடும் பாஜக!

கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பினர் கட்டாயப்படுத்தி மலக்குழியை சுத்தம் செய்ய சொன்னதன் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு தூய்மை பணியாளர் ஒருவர் இறந்துள்ளதாக பாஜகவின் பொதுச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி'உங்கள் அரசியல் மலக்குழியை விட மோசமாக வீசுகிறது': சு.வெங்கடேசன் எம்.பியைச் சாடும் பாஜக!

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு, தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘’புரச்சீ போராளி விளம்பர அரசியல் பிரியர் சு வெங்கடேசன் அவர்களுக்கு வணக்கம்! கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி 12 வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், தூய்மை பணியாளர் ஒருவரை மலம் கலந்த நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய கூறியுள்ளார்.

இதன் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவ மருத்துவமனைக்கு சென்று பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த தூய்மை பணியாளர் இறந்துள்ளார். சட்டப்படி குற்றம் என தெரிந்தும் அந்த பாவப்பட்ட தூய்மை பணியாளரை அந்த கழிவுநீர் கால்வாயில் இறங்கி வேலை செய்ய சொன்னது உங்கள் சக தோழர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் விஸ்வநாதன் தான்.

இறந்தவர் பட்டியலின சகோதரர்! எங்கே உங்கள் செங்கொடி! எங்கே உங்கள் போராட்ட குணம்! எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்பொழுது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? ஏன் உங்களது செங்கொடி உங்கள் சக தோழர்களுக்கு எதிராக ஏறாதா? அல்லது உங்கள் செங்கொடி பட்டியலின சமுதாய சகோதரர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடாதா?

பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியைப் போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in