வி.கே.பாண்டியனின் பிணைக்கைதியாக இருக்கும் முதல்வர் பட்நாயக்கை மீட்டுத் தாருங்கள் - டிஜிபியிடம் பாஜக புகார்

முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை அவரது முன்னாள் உதவியாளர் வி.கே.பாண்டியன் வசமிருந்து மீட்குமாறு மாநில டிஜிபியிடம் பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒடிசா மாநில டிஜிபி அருண்குமார் சாரங்கிக்கு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் சமீர் மொகந்தி எழுதிய கடிதத்தில், முதல்வர் பட்நாயக்கை கடந்த வி.கே.பாண்டியன் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். “ஒடிசாவில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நமது மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை அவரது முன்னாள் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் சில நாட்களாக பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து ஒன்று தெரிகிறது. பாண்டியன் மற்றும் ஒடியா அல்லாத வேறு சில அதிகாரிகளால் மாநில முதல்வர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளரும், நீங்களும் முதல்வரை எப்போதும்போல தொடர்பு கொள்ள முடிகிறதா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் முதல்வர் பட்நாயக், வி.கே.பாண்டியனால் சிறைபிடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக ஒடிசாவின் அடுத்த முதல்வராக வி.கே.பாண்டியனை நியமிக்க சதித் திட்டம் உள்ளதாகவும் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டி இருந்தார்.

“ஒடிசாவின் அனைத்து மக்களுக்கும் முதலமைச்சரைப் பற்றி அறிய உரிமை உண்டு. எனவே, நீங்கள் ஒரு நீதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வி.கே.பாண்டியனின் பிடியில் இருந்து முதல்வரை விடுவித்து, ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்தின் நலனுக்காக, சரியான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் மொஹந்தியின் அந்த கடிதத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வி.கே.பாண்டியன்
வி.கே.பாண்டியன்

இதற்கு உடனடியாக பதிலளித்த பட்நாயக், “பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு. பாஜக அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன்” என்று பட்நாயக் கூறினார். வி.கே.பாண்டியனும், “இல்லாத ஒன்றைப் பற்றி பேசாமல் புதுமையான யோசனைகளை பாஜக முன்வைக்க வேண்டும்” என்று சாடியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in