ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உதயநிதி - அங்கீகரித்த பாஜக!

பிரதமரை உதயநிதி சந்தித்தபோது...
பிரதமரை உதயநிதி சந்தித்தபோது...

துணை முதல்வர் அந்தஸ்துக்கு சற்றும் குறைவில்லாத மரியாதை உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதோ கிடைக்க ஆரம்பித்துவிட்டது அமைச்சரான பின்பு சூப்பர் முதல்வராகவே அவர் செயல்பட்டு வருகிறார். அடுத்த கட்டமாக, அவருக்கான அங்கீகாரத்தை டெல்லியிலும் நிலைநாட்டிவிட்டது திமுக தலைமை.

அமைச்சரவைக்கு ஜூனியரான உதயநிதி டெல்லியில் மூத்த, முக்கிய அமைச்சர்களை சந்தித்ததுடன் மட்டுமல்லாது ஒரு முதல்வருக்கான முக்கியத்துவத்துடன் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். இதன் மூலம், உதயநிதிக்கு ஸ்டாலினுக்கு அடுத்த நிலையிலான அந்தஸ்து தரப்படுவதை பாஜக தலைமையும் மத்திய அரசும் அங்கீகரித்திருக்கிறது. அதனால் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு எவ்வித சிரமும் இல்லாமல் பிரதமரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தச் சந்திப்பு எவ்வித சிக்கலும் இல்லாமல் நடந்தேற வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் மூத்த அமைச்சர்கள் சிலரும் கடந்த ஒருமாத காலமாக களப்பணி செய்தார்களாம். தங்களது முயற்சி வெற்றி பெற்றதில் மோடி - உதயநிதி சந்திப்புக்கான சடங்குகளைச் செய்தவர்கள் செம குஷியில் இருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in