வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறது... பிஜு ஜனதா தளம் அரசு மீது ஜே.பி.நட்டா பகீர் குற்றச்சாட்டு!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

ஒடிசா மாநிலம், ஆளும் பிஜு ஜனதா தளம் அரசு, வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் 'சுபத்ரா யோஜனா' என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

பிஜு ஜனதா தளம் அரசு, வாக்குகளுக்காக லஞ்சம் கொடுக்கும் வேலையைச் செய்கிறது. ஒரு நாளைக்கு 54 பைசாவுக்கு உங்கள் 5 ஆண்டு உரிமையைப் பறிக்க முயற்சி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில், சுபத்ரா யோஜனாவின் கீழ் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒடிசாவில் உள்ள பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்க வவுச்சர்களை வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.

இந்த தொகை ஆண்களுக்கானது அல்ல; பெண்களுக்கானது. இந்த பணத்தை என்ன செய்வது என்று பெண்ணால் தீர்மானிக்க முடியும். ஒரு நபர் அதிகாரம் பெற்றால், அவர் மட்டுமே அதிகாரம் பெற்றவர். ஆனால் பெண்கள் அதிகாரம் பெற்றால், முழு குடும்பமும் அதிகாரம் பெறும் என பிரதமர் மோடி கூறுகிறார். நாம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்று மோடி கூறுகிறார். அதனால்தான் பெண்களுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

'நாரி சக்தி வந்தன்' மசோதா அரசியல் காரணங்களுக்காக 27 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால், பிரதமர் மோடி வெறும் 3 நாட்களில் மசோதாவை நிறைவேற்றி உண்மையிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளித்தார். 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலும், ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும்போது, 33 சதவீத பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

பாஜக, பிஜு ஜனதா தளம்
பாஜக, பிஜு ஜனதா தளம்

கொரோனா பொது முடக்கத்தின் போது, நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் மூன்று மாதங்களுக்கு பெண்களின் கணக்குகளுக்கு மாதம் 500 ரூபாயை பிரதமர் மோடி அனுப்பினார். 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறை, உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் வழங்கியதன் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளார்” என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in