'சாதிவெறியுடன் பேசினார்' - பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது பிக்பாஸ் பிரபலம் பகீர் புகார்!

அர்ச்சனா கௌதம்
அர்ச்சனா கௌதம்'சாதிவெறியுடன் பேசினார்' - பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது பிக்பாஸ் பிரபலம் பகீர் புகார்!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தனி உதவியாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சாதிவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அர்ச்சனா கௌதம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தி பிக் பாஸ்-16 ன் டாப்-5 இறுதிப் போட்டியாளரான அர்ச்சனா கௌதமின் தந்தை தனது மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் மீது குற்றம்சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பர்தாபூர் காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரில், சாதிவெறி வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டினார். அர்ச்சனா கெளதமும் இந்த சம்பவம் குறித்து பேஸ்புக் லைவ் ஒன்றில் விரிவாகப் பேசினார். இதனையடுத்து எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் மீரட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியங்கா காந்தியின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 26ம் தேதி சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள தனது மகள் சென்றதாக அர்ச்சனா கௌதமின் தந்தை கௌதம் புத் தெரிவித்தார். அங்கு, அவர் சந்தீப் சிங்கிடம் பிரியங்கா காந்தியைச் சந்திக்க நேரம் கோரினார். ஆனால், அவர் பிரியங்கா காந்தியிடம் அறிமுகம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் ஜாதிவெறி வார்த்தைகள் மற்றும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி அர்ச்சனாவிடம் அநாகரிகமாக பேசினார் என்றும், கொலைமிரட்டல் விடுத்தார் என்றும் கௌதம் புத் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in