பிக் பாஸ் விக்ரமனை வெற்றிபெறச் செய்யுங்கள்: திருமாவளவன் கோரிக்கை

விக்ரமன்.
விக்ரமன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர் விக்ரமனுக்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்யுங்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ஷிவின், அமுதவாணன், அசீம், விக்ரமன், நந்தினி, கதிரவன் ஆகியோர் இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.

இதில் கதிரவன் நேற்று பரிசு பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் மீதமுள்ள 5 பேருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக அசீம் மற்றும் விக்ரமன் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் இருவரது ஆதரவாளர்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது முகநூலில் பிக் பாஸில் போட்டியாளராக இருக்கும் விக்ரமனுக்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்வோம் என குறிப்பிட்டுள்ளார். இது விக்ரமன் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர் விக்ரமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in