உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய வெற்றி: டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால்தி இந்து

துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட டெல்லியின் சிவில் அமைப்பு உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. டெல்லி மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே மோதல் வெடித்தது.

பாஜகவைச் சேர்ந்தவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியதால் இரண்டு மாதங்களில் மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் பாஜகவை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் வென்றது. ஆனால் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவால் நியமிக்கப்பட்ட கவுன்சில் உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க முயன்றனர், இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் "ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் கூட்டங்களை நடத்துவார் என்பதை வலியுறுத்த வேண்டும். மேயர் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும். பின்னர் துணை மேயர் தேர்தலுக்கான கூட்டங்களுக்கு மேயர் தலைமை தாங்குவார்" என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு "டெல்லியில் லெப்டினன்ட் கவர்னரும் பாஜகவும் எப்படி சட்டவிரோத உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது" என்று அர்விந்த் கேஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். "உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்தின் வெற்றி. உச்ச நீதிமன்றத்திற்கு மிக்க நன்றி. டெல்லிக்கு இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மேயர் பதவி கிடைப்பார். லெப்டினன்ட் கவர்னரும் பா.ஜ.க.வும் சேர்ந்து எப்படி சட்ட விரோதமான, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான உத்தரவை பிறப்பிக்கிறார்கள் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது” என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

டிசம்பரில் நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளை வென்று பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. பாஜக 104 வார்டுகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளரான ஷெல்லி ஓபராய், தேர்தலை முன்கூட்டியே நடத்தவும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கலாமா என்பதை தெளிவுபடுத்தவும் கோரி வழக்கு தொடர்ந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in