ஸ்வாதி மலிவால் மீது தாக்குதல்... கேஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்!

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பியுமான ஸ்வாதி மலிவாலை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், மே 17ம் தேதி காலை 11 மணிக்கு பிபவ் குமாரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் பிபவ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், "டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்வாதி மலிவால், அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டிய ஊடக செய்திகளை அடிப்படையாக கொண்டு இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு வரும் மே 17ம் தேதி அன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு திட்டமிட்டுள்ளது. அதில் நீங்கள் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்வாதி மாலிவால்
ஸ்வாதி மாலிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஸ்வாதி மலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீஸுக்கு போன் மூலம் முறையிட்டார். இதுகுறித்து தொடக்கத்தில் மவுனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் எனவும், இந்த விவகாரம் குறித்து கேஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்தது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in