கடலூரில் 18 ஆயிரம் பேரின் உதவித்தொகையை நிறுத்திட்டாங்க: அதிமுக எம்எல்ஏ திடீர் புகார்

கடலூரில் 18 ஆயிரம் பேரின் உதவித்தொகையை நிறுத்திட்டாங்க: அதிமுக எம்எல்ஏ திடீர் புகார்

கடலூர் மாவட்டத்தில் அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தவர்களில் சுமார் 18000 பேருக்கு முன்னறிவிப்பி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருண்மொழித் தேவன் எம்எல்ஏ இது குறித்து நம்மிடம் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்டத்தில் ஆதரவற்றவர்கள், முதியோர், மற்றும் விதவைகள் பல்லாயிரக்கணக்கானோர் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். அதை வைத்து தான் அவர்களின் வாழ்வாதாரமே நடக்கிறது. இந்த நிலையில் திடீரென அவர்களில் 18 ஆயிரம் பேருக்கு முன்னறிவிப்பின்றி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

இப்படி நிறுத்தப்பட்டுள்ளது குறித்து அவர்கள் யாருக்கும் முறைப்படியான எந்த தகவலையும் அதிகாரிகள் அளிக்கவில்லை. மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை இப்படி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் செய்வதறியாமல் திகைத்திருக்கின்றனர். ஒருவேளை உணவுக்கு வழி இல்லை என்று அவர்கள் தவிக்கிறார்கள். இப்படி உதவித்தொகையை நிறுத்தியிருப்பது அநீதியாகும்.

வாழ வழியின்றித் தவிக்கும் அவர்களைப் பார்ப்பதற்கே வேதனையாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு உடனடியாக மாத உதவித் தொகையை வழங்கவும், நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in