மோடியைப் புகழ்ந்து பேசினால் பாரத ரத்னா விருதா? : சீமான் கேள்வி

மோடியைப் புகழ்ந்து பேசினால் பாரத ரத்னா விருதா? :  சீமான் கேள்வி

“மோடியைப் புகழ்ந்து பேசினால் பாரத ரத்னா விருது தருவீர்களா என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார். இப்பிரச்சினை சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் இளையராஜாவை பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், இளையராஜாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது, “மோடியைப் புகழ்ந்து பேசினால் விருது தருவார்களா? மோடியைப் புகழ்வது இளையராஜாவின் தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட கருத்து. அவருடைய கருத்தை நாம் ஏற்கிறோமா? எதிர்க்கிறோமா என்பது வேறு. அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை, எனென்றால், அவரை விட மோடிய புகழ்ந்து பேசியவர்கள் தான், இப்போது இளையராஜாவை திட்டுகிறார்கள்" என்று கூறினார்.

கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது குறித்த கேள்விக்கு," யுவன் குழம்பக்கூடாது. அவர் பெருமைக்குரிய தமிழன். அனைத்தையும் விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், அதுவே நோய் ஆகிவிடும். கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால், தென் ஆப்பிரிக்காவில் கூட கருப்பாக இருக்கிறார்கள், அவர்களெல்லாம் திராவிடர்களா? எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது. அது திராவிடரா? எங்கள் இனத்தின் நிறம் கருப்பு. நாங்கள் கருப்பர்கள் தான். உழைக்கும் மக்களின் தோல் கருப்பாக தான் இருக்கும். உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் தோல் தான் மினுமினுப்பாக வெள்ளையாக இருக்கும். எருமை மாடு என நான் ஒப்பீடு செய்யவில்லை. இது ஒப்பீடும் இல்லை. உதாரணம் வேறு, ஒப்பிட வேறு" என சீமான் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in