பாரத் ஜோடோ யாத்திரை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல: மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கேபாரத் ஜோடோ யாத்திரை மல்லிகார்ஜுன கார்கே

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என்றும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மூலம் நாட்டில் பரப்பப்படும் வெறுப்பை முறியடிப்பதற்காகவே யாத்திரை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பாரத் ஜோடோ யாத்திரையின் உச்சகட்டப் பேரணியில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுப்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக கூறினார். அவர், “இந்த யாத்திரை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல, வெறுப்புக்கு எதிராக நடத்தப்பட்டது. பாஜகவினர் நாட்டில் வெறுப்பை பரப்புகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிஜி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியோர் ஏழை மக்களை ஏழைகளாகவும், பணக்காரர்களை பணக்காரர்களாகவும் மாற்ற விரும்புகின்றன. பத்து சதவீத மக்கள் நாட்டின் 72 சதவீத செல்வத்தை சூறையாடுகிறார்கள், 50 சதவீத மக்கள் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

இந்த பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “கன்னியாகுமரியில் இருந்து கடந்த ஐந்து மாதங்களாக என் அண்ணன் நடைபயணம் செய்கிறார். மக்கள் வெளியே வருவார்களா என்ற சந்தேகம் எனக்கு முன்பு இருந்தது. ஆனால் அவர்கள் எல்லா இடங்களிலும் வெளியே வந்தார்கள். நாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு இருப்பதால் அவர்கள் வெளியே வந்தார்கள். ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்குள் நுழையும் போது, அவர் வீட்டிற்குச் செல்வதாக தாய் சோனியா காந்திக்கு செய்தி அனுப்பினார். முழு நாடும் யாத்திரைக்கு ஆதரவளித்தது. நாட்டில் நடக்கும் பிளவுபடுத்தும் அரசியலால் நாட்டுக்கு நன்மை செய்ய முடியாது. பாரத் ஜோடோ யாத்திரையில் நடந்தவர்கள் நம்பிக்கைக் கதிர்களை வெளிப்படுத்தியுள்ளனர்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in