‘பகத்சிங் ஒரு பயங்கரவாதி’ - பஞ்சாப் எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!


‘பகத்சிங் ஒரு பயங்கரவாதி’ - பஞ்சாப் எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை பயங்கரவாதி என்று கூறியதற்காக, பஞ்சாபின் சங்ரூர் தொகுதி எம்.பி.யும், சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவருமான சிம்ரஞ்சித் சிங் மான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பஞ்சாப் அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹயெர் கூறியுள்ளார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பகத்சிங் செய்த மிக உயர்ந்த தியாகத்திற்காக மாநில அரசு அவருக்கு தியாகி அந்தஸ்தை வழங்குவதாக பஞ்சாப் உயர்கல்வி மற்றும் மொழிகளுக்கான அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹயெர் அறிவித்தார். மேலும், "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியான சிம்ரஞ்சித் சிங் மான், நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரை தியாகம் செய்த புகழ்பெற்ற தியாகி பகத் சிங்கின் தியாகங்களை மதிக்கவில்லை" என்று கூறினார்.

வியாழன் அன்று கர்னாலில் செய்தியாளர்களுடன் பேசிய சிம்ரஞ்சித் சிங் மான், “பகத் சிங் ஒரு இளம் ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றார், அவர் ஒரு அமிர்ததாரி சீக்கிய கான்ஸ்டபிள் சன்னன் சிங்கைக் கொன்றார் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது அவர் தேசிய சட்டமன்றத்தின் மீது வெடிகுண்டை வீசினார். இப்போது ​​பகத் சிங் பயங்கரவாதியா இல்லையா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.. ”என்று கூறியது பஞ்சாபில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது

சிம்ரஞ்சித் சிங் மான்
சிம்ரஞ்சித் சிங் மான்

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலும், சிம்ரஞ்சித் சிங் மானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு பஞ்சாபியும் மற்றும் ஒவ்வொரு இந்தியரும் சுதந்திரப் போராட்டத்தில் நமது பங்களிப்பின் அடையாளமாக பகத்சிங்கை கருதுகிறார்கள். ஆனால் இந்த பெருமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் இமேஜை குறைக்கவும் சிம்ரஞ்சித் சிங் மான் முயற்சிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in