மேற்கு வங்கம் யாருக்கும் தலைவணங்காது: மம்தா பானர்ஜி சீற்றம்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மனிதாபிமானம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மேற்கு வங்கம் எப்போதும் போராடும் என்றும், இவற்றுக்காக யாரிடமும் தலைவணங்காது என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற 28வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் (KIFF) தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், "வங்கத்திற்கு ஒரு நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. மேற்கு வங்கம் ஒற்றுமை, மனிதநேயம், பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தொடர்ந்து போராடி வருகிறது. இந்தப் போராட்டம் தொடரும்” என்றார்.

மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மேற்கு வங்கத்திற்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தொகை மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகள் பற்றி பேசிய அவர், "எங்கள் மாநிலம் யாருக்கும் தலைவணங்குவதில்லை, யாரிடமும் பிச்சை எடுப்பதுமில்லை" என்று கூறினார்.

இந்திய மற்றும் உலக சினிமாவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்தார். மேற்கு வங்கத்தின் பிராண்ட் அம்பாசிடரான நடிகர் ஷாருக்கானைப் பற்றி பேசிய மம்தா, “அவர் என் சகோதரர் என்று நான் உணர்கிறேன். நான் அவருக்கு ஒவ்வொரு வருடமும் ராக்கி கட்டுவேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in